திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்தவர் முகம்மது ஹாரிஸ் (36). சில மாதங்களுக்கு முன்பு காயங்குளத்தை சேர்ந்த ஒரு பெண்கள் பள்ளி ஆசிரியைக்கு போன் செய்து, தான் ஒரு சினிமா தயாரிப்பாளர் என்று கூறி உள்ளார். ஒரு மலையாள சினிமா எடுக்கப் போவதாகவும், அதில் நடிப்பதற்கு மாணவிகள் யாருக்காவது ஆர்வம் இருந்தால் வாய்ப்பு தர தயாராக இருப்பதாகவும் கூறி இருக்கிறார். அதைத்தொடர்ந்து சில மாணவிகளின் செல்போன் எண்களை ஆசிரியையிடம் இருந்து வாங்கி உள்ளார். பின்னர் முகம்மது ஹாரிஸ், மாணவிகளை வீடியோ காலில் அழைத்து சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி சில காட்சிகளை நடித்துக் காட்டுமாறு கூறுவார். பின்னர் வேறொரு காட்சியில் நடிக்க வேண்டும் என்று கூறி ஆடைகளை கேமரா முன்பு மாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.
அதை தன்னுடைய செல்போனில் பதிவு செய்துள்ளார். இவ்வாறு பல மாணவிகளின் உடை, ஆபாச வீடியோக்களை முகம்மது ஹாரிஸ் வீடியோவாக பதிவு செய்தார். தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்த சில மாணவிகள் அவரை தொடர்பு கொண்டபோது யாரிடமாவது கூறினால் இன்ஸ்டாகிராமில் வீடியோவை வெளியிடுவேன் என்று மிரட்டி உள்ளார். இந்த சம்பவம் குறித்து காயங்குளம் பள்ளி ஆசிரியைக்கு தெரியவந்தது. உடனே அவர் காயங்குளம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். தொடர்ந்து முகம்மது ஹாரிசை அதிரடியாக கைது செய்தனர். தற்போது அவரிடம் கிடுக்கிப்பிடியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி ஆபாச வீடியோ எடுத்து மாணவிகளை மிரட்டிய வாலிபர் கைது appeared first on Dinakaran.