×

சென்னை புதுப்பேட்டையில் ஆன்லைன் செயலி மூலம் கடன் வாங்கிய இளைஞர் தற்கொலை..!!

சென்னை: சென்னை புதுப்பேட்டையில் ஆன்லைன் செயலி மூலம் கடன் வாங்கிய நபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். சென்னை புதுப்பேட்டை பகுதியை சேர்ந்த இளைஞர் ஆன்லைன் செயலி மூலம் கடன் பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. கடன் தொகையை செலுத்திய போதும், அவரது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து நெருங்கியவர்களுக்கு அனுப்பி மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் கடன் செயலி தரப்பினர் விடுத்த மிரட்டலால் ஏற்பட்ட மன உளைச்சலில் இளைஞர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். சம்பவம் குறித்து எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சென்னை புதுப்பேட்டையில் ஆன்லைன் செயலி மூலம் கடன் வாங்கிய இளைஞர் தற்கொலை..!! appeared first on Dinakaran.

Tags : Pudupettai, Chennai ,Chennai ,Puduppet, Chennai ,Puduppet ,Dinakaran ,
× RELATED தயிர் வியாபாரியை மிரட்டி ரூ.35 ஆயிரம்...