×

துணிக்கடையில் புகுந்து வியாபாரி மீது தாக்குதல் வாலிபர் அதிரடி கைது மனைவியை வேலைக்கு சேர்த்ததால்

செய்யாறு, மே 9: செய்யாறில் மனைவியை வேலைக்கு சேர்த்ததால் துணிக்கடையில் புகுந்து வியாபாரியை தாக்கி ரகளையில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். செய்யாறு டவுன் லோகநாதன் தெருவை சேர்ந்தவர் ஏ.பாசில்(29), இவர் அதே தெருவில் ஆண்களுக்கான துணிக்கடை வியாபாரம் செய்து வருகிறார். இந்தக் கடையில் பெரிய செங்காடு கிராமத்தைச் சேர்ந்த ராகுல்(27) என்பவரது மனைவி ஆஷா (21) என்பவர் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த 4ம் தேதி இரவு 9 மணி அளவில் ஆஷாவின் கணவர் ராகுல் திடீரென கடைக்குள் அத்துமீறி நுழைந்து எனது மனைவி ஆஷாவை ஏன் வேலையில் சேர்த்து உள்ளீர்கள் நீங்கள் வேலையில் வைத்திருப்பதால் தான் அவள் என்னை மதிப்பதில்லை. எப்போது பார்த்தாலும் யாருடனும் போனில் பேசிக் கொண்டிருக்கிறார்.

வேலையில் வைத்துக் கொண்டிருந்தால் உங்களை ஒழித்துக் கட்டி விடுவேன் என பாசிலை பார்த்து ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்து தாக்கி உள்ளார். கடையில் ஏற்பட்ட கூச்சலை பார்த்து பக்கத்து கடையிலிருந்து வந்த வியாபாரி முகமது இம்ரானையும் ஆபாசமாக பேசி கத்தி காட்டி மிரட்டி உள்ளார். பின்னர் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வருவதை பார்த்ததும் அங்கிருந்து ராகுல் தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து பாசில் செய்யாறு போலீசில் புகார் செய்தார் அதன் பெயரில் சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்கு பதிவு செய்து ராகுலை நேற்று கைது செய்து செய்யாறு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வந்தவாசி கிளைச்சிறையில் அடைத்தனர்.

The post துணிக்கடையில் புகுந்து வியாபாரி மீது தாக்குதல் வாலிபர் அதிரடி கைது மனைவியை வேலைக்கு சேர்த்ததால் appeared first on Dinakaran.

Tags : Seyyar ,A. Basil ,Loganathan Street, Seiyaru Town ,
× RELATED உத்திரமேரூர் அருகே மழை பாதித்த சாலைகள் சீரமைக்கும் பணி தீவிரம்