×

ஓராண்டு உணவு தயாரிப்பு பயிற்சி

சேலம், மே 9: சேலம் நாச்சியப்பா கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலையத்தில், தேசிய தொழிற்சார் பயிற்சி கழகம் (என்.சி.வி.டி) புதுடெல்லி நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற ஓராண்டு சமையல், உணவு தயாரித்தல் (பொது) பயிற்சியை 2008ம் ஆண்டில் இருந்து நடத்தி வருகிறது. சாதாரணமாக இதுபோன்ற பயிற்சிகளை அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் தவிர, இதர நிறுவனங்களில் படிக்க வேண்டும் எனில், அதிகமாக பயிற்சி கட்டணம் செலுத்த வேண்டும். இப்பயிற்சியினை நிறைவு செய்பவர்களுக்கு நட்சத்திர ஓட்டல், கப்பல் நிறுவனங்கள், ரயில்வே துறை, உற்பத்தி துறை, விமான துறை சமையலர், மத்திய, மாநில அரசு விடுதி சமையலர், உணவு உற்பத்தி நிறுவனங்களில் அதிக சம்பளத்தில் உடனடி வேலை கிடைக்கிறது. தற்போது 2024 -25ம் ஆண்டிற்கான சேர்க்கை நடைபெற்று வருகிறது. மேலும் விவரங்களுக்கு நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலைய தொலைபேசி எண் 0427 2240944, மற்றும் 98651 12646, 76672 50378 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். என நாச்சியப்பா கூட்டுறவு தொழிற்பயிற்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஓராண்டு உணவு தயாரிப்பு பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Salem ,National Corporation for Vocational Training ,NCVT ,New Delhi ,Nachiyappa Cooperative Vocational Training Centre ,Dinakaran ,
× RELATED சேலம் மாநகர் முழுவதும் ₹135 கோடியில் சாக்கடை கால்வாய்கள் சீரமைப்பு