×

சில்லி பாய்ன்ட்…

* 1986ல் நடந்த உலக கோப்பை கால்பந்து போட்டித் தொடரில் சிறப்பாக செயல்பட்டதற்காக அர்ஜென்டினா நட்சத்திரம் டீகோ மரடோனாவுக்கு வழங்கப்பட்ட தங்கப் பந்து விருது திருடு போனதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில், அந்த தங்கப் பந்து ஜூன் 6ம் தேதி ஏலத்துக்கு வருகிறது. அதில் பங்கேற்க வைப்புத் தொகையாக ரூ.1 கோடியே 36 லட்சம் கட்ட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
* ஐபிஎல் தொடரின் அடுத்த சீசனில் ரோகித் ஷர்மா மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட மாட்டார் என பாகிஸ்தான் அணி முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் கருத்து தெரிவித்துள்ளார்.
* 22 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்று சாதனை படைத்த ஸ்பெயின் நட்சத்திரம் ரபேல் நடால், இத்தாலியன் ஓபன் டென்னிஸ் தொடரில் 305வது ரேங்க் வீரராகக் களமிறங்குகிறார். முன்னாள் நம்பர் 1 வீரரான நடால், காயம் காரணமாக நீண்ட ஓய்வில் இருந்ததால் தரவரிசையில் இவ்வளவு பின்தங்க நேரிட்டுள்ளது.
* ‘ஐசிசி உலக கோப்பை டி20 தொடருக்கான இந்திய அணியில் ஜடேஜா, குல்தீப், சாஹல், அக்சர் என 4 சுழற்பந்துவீச்சாளர்கள் தேர்வு செய்யப்பட்டிருப்பது ஆச்சரியம் அளிக்கவில்லை. தங்களின் பலம் எது என்பதை அவர்கள் தெளிவாக உணர்ந்திருப்பதன் வெளிப்பாடு தான் இது’ என்று வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் கோர்ட்னி வால்ஷ் கூறியுள்ளார்.

The post சில்லி பாய்ன்ட்… appeared first on Dinakaran.

Tags : Diego Maradona ,1986 World Cup soccer ,Dinakaran ,
× RELATED முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்!