×

திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் வயிற்றில் துணியை சுற்றிக் கொண்டு கர்ப்பிணி போல நடித்து மோசடி

திருப்பூர்: திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் மோசடியாக பணம் பறிக்கும் நபர்கள் அதிகரித்து உள்ளதாகவும் பெண்கள் வயிற்றில் துணியை சுற்றிக் கொண்டு கர்ப்பிணி போல நடித்து மோசடியில் ஈடுபடுவதாக வெளியான வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் பல விதங்களில் மோசடி நடைபெறுவதாக புகார் எழுந்து வரும் நிலையில் பொதுமக்களிடம் பணம் பறிக்க பல விதங்களில் மோசடியாளர்கள் ஏமாற்றி வருகின்றனர். அதில் ஒன்று கர்ப்பிணி போல வயிற்றில் துணி சுற்றிக் கொண்டு பிச்சை எடுப்பது போலவும் சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் பணம் தொலைந்து விட்டது என ஆளுக்கு தகுந்தார் போல ஏமாற்றி பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்து உள்ளது.

இந்நிலையில் பேருந்து நிலையத்தில் எஸ்கலேட்டர் பகுதியில் பெண்கள் இருவர் வயிற்றில் துணியை சுற்றிக் கொண்டு இருப்பதை கண்ட பொதுமக்கள் சிலர் அங்கிருந்த பெண் ஒருவர் உதவியுடன் அவர்களின் வயிற்றில் கட்டியிருந்த துணியை அகற்றி அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் இது மட்டுமல்லாது பல வகையிலும் பொதுமக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் சூழல் நிலவி வருவதாகவும் பொதுமக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் எனவும் காவல் துறையினர் இது போன்ற பணம் பறிக்கும் நபர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் வயிற்றில் துணியை சுற்றிக் கொண்டு கர்ப்பிணி போல நடித்து மோசடி appeared first on Dinakaran.

Tags : Tirupur Central Bus Station ,Tirupur ,
× RELATED திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள வணிக வளாகத்தில் தீ விபத்து