- மம்தா பானர்ஜி சாடல்
- துர்காபூர்
- மம்தா பானர்ஜி
- தேர்தல் ஆணையம்
- மேற்கு வங்கம்
- முதல் அமைச்சர்
- திரிணாமூல் காங்கிரஸ்
- ஜனாதிபதி
- பாங்குரா
- பாஜக
துர்காபூர்: தேர்தல் நடத்தை விதிகளை மோடி நடத்தை விதிகள் என்று மறு பெயரிடலாம் என்று மம்தா பானர்ஜி தேர்தல் ஆணையத்தை சாடினார். மேற்குவங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, பங்குராவில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பேசுகையில், ‘பாஜகவினரின் வெறுப்பு பேச்சு தொடர்பாக அளிக்கப்படும் புகார்கள் மீது தேர்தல் ஆணையம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், தேர்தல் நடத்தை விதிகளை, மோடி நடத்தை விதிகள் என்று தேர்தல் ஆணையம் மறுபெயரிட வேண்டும்.
உத்தரபிரதேசத்தில் சிறுபான்மையினர் வாக்களிக்க விடாமல் தடுக்கப்பட்டு தாக்கப்பட்டுள்ளனர். தேர்தல் பணியில் இருப்பவர்கள், பாஜகவின் ஏஜெண்டுகளாக செயல்படுகின்றனர். ஆனால் மேற்குவங்கத்தில் அப்படி செய்ய முடியாது. பழங்குடியின மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக அவர்களுக்கு பாஜக பணத்தை கொடுக்கிறது. மேற்குவங்க பெண்களை இழிவுபடுத்தும் வகையில், சந்தேஷ்காலி பெண்களை தூண்டிவிட்டது. மோடியை போன்று பொய் சொல்லும் எந்த பிரதமரையும் நான் பார்த்ததில்லை. எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் முஸ்லிம்கள் தங்கள் அடையாளத்தை இழக்கச் செய்யும் வகையிலான சிவில் சட்டத்தை அமல்படுத்த பாஜக சதி செய்கிறது’ என்று கூறினார்.
The post தேர்தல் நடத்தை விதிகளை மோடி நடத்தை விதிகள் என்று மாற்றலாம்: மம்தா பானர்ஜி சாடல் appeared first on Dinakaran.