பாலக்காடு : பாலக்காடு மாவட்டம், ஆனக்கரை சிவன் கோயிலில் நடைபெற்ற தாலப்பொலி திருவிழாவில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டனர். பட்டாம்பியை அடுத்த ஆனக்கரை சிவன் கோயிலில் ஆண்டுந்தோறும் ஆட்டத்திருவிழா நடைபெற்று வருவது வழக்கம். இந்தாண்டும் விழாவில் விஷேச பூஜைகள் நடைபெற்றன. நேற்று காலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு மூலவருக்கு அபிஷேக அலங்கார பூஜைகள் நடந்தன.
இதைத்தொடர்ந்து, விழா நிகழ்ச்சிகள் கணபதி ஹோம பூஜையுடன் ஆரம்பித்தன. அலங்கார பூஜை மற்றும் உச்சிக்கால பூஜைகளை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் கோயில் வளாகத்தில் திரண்டனர். நேற்று மாலை 5 மணிக்கு மகளிர் கார்த்திகை தீபங்கள் ஏந்தி, அருளாளியுடன் செண்டை வாத்தியங்கள் அதிர வீதியுலா வந்து மூலவரை தரிசனம் செய்து மகிழ்ச்சி அடைந்தனர். தொடர்ந்து, அதிகாலை 3 மணிக்கு பக்தர்கள் பூக்குழி மிதித்து அம்மனையும் வழிபட்டனர். இந்நிகழ்ச்சியில் திரளாக பக்தர்கள் பங்கேற்றனர்.
The post ஆனக்கரை சிவன் கோயிலில் தாலப்பொலி திருவிழாவில் திரளாக பக்தர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.