×

மாவட்ட மைய நூலகத்தில் குரூப் 4 மாதிரி தேர்வு

திருச்சி, மே 8: திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் குரூப் 4-க்கான மாதிரித்தேர்வு நடந்தது. திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான மாதிரி தேர்வு நடைபெற்று வருகிறது. நேற்று முன்நதினம் ரங்கம் சித்திரை தேரோட்டத்தையொட்டி உள்ளூர் விடுமுறை விடப்பட்டதால் இந்த வாரம் மாதிரி தேர்வு நேற்று (7ம் தேதி) மைய நூலகத்தில் நடந்தது.

இதில் திரளானோர் பங்கேற்று தேர்வு எழுதினர். தேர்வில் முழு பாடப்பகுதியிலிருந்து வினாக்கள் இடம் பெற்றன. மாணவர்களுக்கு வினா தொகுப்பு வழங்கப்பட்டு ஓஎம்ஆர் விடைத்தாளில் பதிலளித்தனர். உடனே மதிப்பெண்கள் அறிவிக்கப்பட்டது. குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு மதிப்பெண்ணை அதிகப்படுத்த அறிவுரை மற்றும் வழிமுறை வழங்கப்பட்டது. தேர்வுக்கு பின் திருப்புதல் வகுப்பு நடைபெறுகிறது.

The post மாவட்ட மைய நூலகத்தில் குரூப் 4 மாதிரி தேர்வு appeared first on Dinakaran.

Tags : District Central Library ,Trichy ,Trichy District Central Library ,TNPSC ,Munnadinam ,Chitrai Derotam ,Dinakaran ,
× RELATED மாவட்ட மைய நூலகத்தில் பொதுஅறிவு வினாடி வினா போட்டி