ஷிவமொக்கா: கர்நாடக மாநிலம் ஷிவமொக்காவில் அரண்மனை வடிவத்தில் வாக்குச்சாவடியை அமைத்து வாக்காளர்களை உற்சாகப்படுத்தியுள்ளனர். கர்நாடக மாநிலத்தில் நேற்று இரண்டாம் கட்டமாக 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. இதில் ஷிவமொக்கா மக்களவை தொகுதியும் ஒன்று. ஷிவமொக்கா குவெம்பு சாலையில் மாவட்ட பஞ்சாயத்து நிர்வாக அலுவலகம் இருக்கிறது. இங்கு வாக்குச்சாவடி வித்தியாசமாக அமைக்கப்பட்டிருந்தது.
தேர்தல் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் இளவரசர், ராணி, அரண்மனை பணிப்பெண் ஆகிய வேடத்தில் கிரீடம் அணிந்து அமர்ந்திருந்தனர். வாக்காளர்கள் தங்கள் வாக்கை பதிவு செய்த பிறகு அவர்களுக்கு ராஜ சிம்மாசனம் வழங்கி கிரீடம் அணிவித்து செல்பி எடுக்கவும் அனுமதிக்கப்பட்டனர். இதனால் வாக்காளர்கள் உற்சாகமடைந்தனர். ஜனநாயகத்தில் வாக்காளர்கள் தான் மன்னர்கள் என்ற நம்பிக்கையில் இந்த ஏற்பாட்டை மாவட்ட நிர்வாகம் செய்திருந்ததாக வாக்குச்சாவடி ஊழியர்கள் தெரிவித்தனர்.
The post கர்நாடகாவில் வாக்காளர்கள் உற்சாகம் அரண்மனை தோற்றத்தில் வாக்குச்சாவடி அமைப்பு appeared first on Dinakaran.