- Syntex
- கரூர் பைபாஸ்
- கரூர்
- நீலக்குடைஸ்
- கரூர் மாவட்ட பைபாஸ் சாலை
- மதுரை
- சேலம்
- கோயம்புத்தூர்
- திருச்சி
- திண்டுக்கல்
- தின மலர்
கரூர், மே. 8: கரூர் மாவட்ட பைபாஸ் சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள நிழற்குடைகளின் அருகில் உள்ள சின்டெக்ஸ் டேங்க்குகளை சுத்தம் செய்து குடிநீர் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூரைச் சுற்றிலும் மதுரை, சேலம், கோவை, திருச்சி, திண்டுக்கல், நாமக்கல் ஆகிய பகுதிகளுக்கு பைபாஸ் சாலை செல்கிறது. இதில், கரூர் பகுதியில் இருந்து நாம க்கல் மாவட்ட எல்லையான தவிட்டுப்பாளையம் வரை சாலையோரம் கிராம பகுதிகளுக்கு சாலைகள் பிரியும் இடத்தில் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. நிழற்குடையின் அருகிலேயே பயணிகள் பயன்படுத்தும் வகையில் சிறிய அளவிலான சின்டெக்ஸ் டேங்க் அமைத்து தரப்பட்டது. நிழற்குடை கொண்டு வரப்பட்ட சில மாதங்கள் இந்த சின்டெக்ஸ் டேங்கில் குடிநீர் நிரப்பப்பட்டது.
ஆனால், அதற்கு பிறகு இதுபோன்ற எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.இதன் காரணமாக சேலம் பைபாஸ் சாலையோரம் மாவட்ட பகுதிகளில் உள்ள நிழற்குடையின் அருகில் உள்ள சின்டெக்ஸ் டேங்க் அனைத்தும் பழுதடைந்தும், அசுத்தமாகவும் உள்ளது. எனவே, கிராம மக்கள் நலன் கருதியும், சாலையில் இரண்டு சக்கர வாகனங்களில் பயணிக்கும் மக்கள் நலன் கருதியும் பழுதடைந்த நிலையில் உள்ள சின்டெக்ஸ் டேங்க் குகளை பழுது நீக்கி, குடிநீர் நிரப்பி அனைவரும் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பைபாஸ் சாலையோரம் உள்ள சின்டெக்ஸ் டேங்க்குகளை பார்வையிட்டு தண்ணீர் நிரப்ப தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
The post கரூர் பைபாஸ் சாலை நிழற்குடைகளின் அருகில் உள்ள சின்டெக்ஸ் தொட்டிகளில் குடிநீர் நிரப்ப கோரிக்கை appeared first on Dinakaran.