செங்கல்பட்டு: செங்கல்பட்டில் பிரியாணி வாங்கியதற்கு பணம் தராமல் கடை ஊழியரை தாக்கிய இருவரை போலீசார் கைது செய்தனர். செங்கல்பட்டு அடுத்த சாஸ்திரி நகர் பகுதியை சேர்ந்தவர் ஜோதிராமலிங்கம் (54). மாற்றுத்திறனாளியான இவர், செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகே பிரியாணி கடையில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், ஜோதிராமலிங்கம் நேற்று கடையில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது, பிரியாணி வாங்கிய இரண்டு இளைஞர்கள் பணம் தராமல் செல்ல முயன்றனர். அப்போது, ஜோதிராமலிங்கம் இளைஞர்களிடம் பணம் கேட்டார். இதனால், ஆத்திரம் அடைந்த இளைஞர்கள் இருவரும் ஜோதிராமலிங்கத்தை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து ஜோதிராமலிங்கத்தின் மகன் அசோக்குமார் (27) கொடுத்த புகாரின்பேரில் செங்கல்பட்டு நகர போலீசார் வழக்கு பதிந்து அதேபகுதியைச் சேர்ந்த முகேஷ் (20) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post பிரியாணிக்கு பணம் கேட்டதால் ஆத்திரம் கடை ஊழியரை தாக்கிய இருவர் கைது: செங்கல்பட்டு அருகே பரபரப்பு appeared first on Dinakaran.