- பிரதான தேர்தல் அதிகாரி
- திருவள்ளூர் வாக்கு எண்ணும் மையம்
- திருவள்ளூர்
- பெருமால்பட்
- தேர்தல் அலுவலர்
- திருவள்ளூர்
- தின மலர்
திருவள்ளூர்: திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்கு பெட்டிகள் அந்தந்த மண்டல அலுவலர்கள் மூலம் சரிபார்க்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையமான திருவள்ளூர் அடுத்த பெருமாள்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அங்கு 24 மணி நேரமும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த மையத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று நேரில் ஆய்வு செய்தார்.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை, வாக்கு எண்ணிக்கை அறை உள்ளிட்ட பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் வாக்கு எண்ணும்போது பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், பார்வையாளர்கள், கட்சி நிர்வாகிகள் வருகை குறித்தும் அவர்களை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
தொடர்ந்து நிருபர்களிடம் அவர் கூறுகையில், ‘இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தபிறகு விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படும். பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனிடம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது வருமான வரித்துறை மற்றும் காவல்துறை மூலமாக விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றார்.
The post திருவள்ளூர் வாக்கு எண்ணும் மையத்தில் தலைமை தேர்தல் அதிகாரி ஆய்வு appeared first on Dinakaran.