×

பிளஸ் 2 தேர்வில் சாதனை படைத்துள்ள மாணவர்கள் அனைவருக்கும் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வாழ்த்து..!!

சென்னை: பிளஸ் 2 தேர்வில் சாதனை படைத்துள்ள மாணவர்கள் அனைவருக்கும் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,இளைய தலைமுறையினர் கற்பதில் ஆர்வம் காட்டி,பிளஸ் 2 தேர்வில் சாதனை படைத்துள்ள மாணவ, மாணவியர் அனைவருக்கும் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. தேர்வு பெற தவறி விட்டவர்கள் தளர்ந்து விடவோ, சோர்வடையவோ, தாழ்வு மனப்பான்மைக்கு இடம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. வெற்றிக்கான படிப்பினையாக ஏற்றுக் கொண்டு முன்னிலும் முனைப்பாக முன்னேற வேண்டும் என வாழ்த்துகிறோம்.

கடந்த 2023 ஆகஸ்டு மாதத்தில் நான்குநேரி பள்ளி மாணவர் சின்னதுரையும், அவரது தங்கையும் அவர்கள் பயிலும் பள்ளி மாணவர்களால் சாதிய வன்மத்தால் வீடு புகுந்து வெட்டிய தாக்குதலில் பிளஸ் 2 மாணவர் சின்னதுரை கடுமையாக பாதிக்கப்பட்டார். சுமார் ஐந்து மாதங்கள் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், இழிவு படுத்திய வேதனை நிறைந்த, துயரங்களை தாண்டி 469 மதிப்பெண் பெற்று தேர்வு பெற்றிருப்பதும், தந்தையை இழந்த நாளில் தேர்வு எழுதிய கடலூர் மாவட்டம் சூரப்பன் சாவடி மாணவி ராஜேஸ்வரி 479 மதிப்பெற்றும் தேர்வு ஆகியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்களுக்கு சிறப்பு வாழ்த்துக்கள். மாணவர் சின்னதுரையின் உயர் கல்விச் செலவு முழுவதையும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஏற்றுக் கொண்டது வரவேற்கதக்கது. அரசுப் பள்ளிகளில் 379 பள்ளிகளில் மாணவர்கள் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்று பெருமை சேர்த்துள்ளனர். மாணவர்கள் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க கடும் பணிபுரிந்த ஆசிரியர்கள் அனைவருக்கும் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

The post பிளஸ் 2 தேர்வில் சாதனை படைத்துள்ள மாணவர்கள் அனைவருக்கும் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வாழ்த்து..!! appeared first on Dinakaran.

Tags : Communist Party of India Tamil Nadu State Executive Committee ,Chennai ,Tamil Nadu State Executive Committee of the Communist Party of India ,
× RELATED மேலாளர் அறைக்கு வந்த மர்ம தொலைபேசி...