×

மாநிலத்தில் 37வது இடத்தை பெற்றது; மயிலாடுதுறை மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 92.38 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி

மயிலாடுதுறை மே 7: மயிலாடுதுறை மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 92.38 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் 9 ஆயிரத்து 644 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 8 ஆயிரத்து 909 மாணவ மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். தேர்ச்சி சதவீதம் 92.38 சதவீதமாக உள்ளது. வழக்கம்போல் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 90.28% பேரும், மாணவிகள் 94.06% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 2.23 % தேர்ச்சி சதவீதம் அதிகமாகும்.

அரசு பள்ளிகளில் மாணவர்கள் 1523 பேரும், மாணவிகள் 2097 பேரும் மொத்தம் 3620 பேர் தேர்வு எழுதினர். இதில் 1238 மாணவர்களும், 1854 மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர். இது 85.41 சதவீதம் ஆகும்.

The post மாநிலத்தில் 37வது இடத்தை பெற்றது; மயிலாடுதுறை மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 92.38 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Mayiladuthurai ,Mayiladuthurai district ,
× RELATED மயிலாடுதுறை அருகே நடுரோட்டில் அரசு...