×
Saravana Stores

ரமணரின் 74ம் ஆண்டு ஆராதனை இளையராஜா இசையஞ்சலி திருவண்ணாமலை ரமணாஸ்ரமத்தில்

திருவண்ணாமலை, மே 7: திருவண்ணாமலை ரமணாஸ்ரமத்தில் நேற்று பகவான் ரமணரின் 74ம் ஆண்டு மகா ஆராதனை நிகழ்ச்சி நடந்தது. அப்போது, இசையமைப்பாளர் இளையராஜா இசையஞ்சலி செலுத்தினார்.
மதுரை அடுத்த திருச்சுழியில் அவதரித்தவர் மகான் ரமண மகரிஷி. இளம் வயதிலேயே உலக பற்றுகளை துறந்து, நினைக்க முக்தித்தரும் அக்னி தலமான திருவண்ணாமலையில் துறவு வாழ்க்கை வாழ்ந்தார்.
அண்ணாமலையார் திருக்கோயில் பாதாள லிங்கம், தீபமலைமீதுள்ள விருபாட்சி குகை போன்ற இடங்களில் தவமிருந்த ரமணர், கடந்த 14.4.1950 அன்று திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள ரமணாஸ்ரமத்தில் முக்தியடைந்தார். அதையொட்டி, ஆண்டுதோறும் சித்திரை மாதம் தேய்பிறை திரயோதசி 11ம் நாளன்று ரமணரின் மகா ஆராதனை நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதன்படி, திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அமைந்துள்ள ரமணாஸ்ரமத்தில் ரமணரின் 74ம் ஆண்டு மகா ஆராதனை நிகழ்ச்சி நேற்று நடந்தது.

அதையொட்டி, அதிகாலை 4 மணிக்கு ருத்ர ஜெயபமும், 4.45 மணிக்கு மங்கள இசை நிகழ்ச்சியும், 5.30 மணிக்கு சிறப்பு தமிழ் பாராயணம் நிகழ்ச்சியும் நடந்தது. மேலும், சிறப்பு அலங்காரம், பாலபிஷேகம், தீபாரதனை ஆகியவை தொடர்ந்து நடைபெற்றது. அதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர். அதைத்தொடர்ந்து, இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை ஆராதனை நடைபெற்றது. அப்போது, மகான் ரமணரை போற்றும் பாமாலைகளை இசைத்து இசையஞ்சலி செலுத்தினார். மகா ஆராதனை வழிபாட்டில் ஆஸ்ரம நிர்வாகி வேங்கட் சு.ரமணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post ரமணரின் 74ம் ஆண்டு ஆராதனை இளையராஜா இசையஞ்சலி திருவண்ணாமலை ரமணாஸ்ரமத்தில் appeared first on Dinakaran.

Tags : Aradhana ,Ramana ,Ilayaraja ,Isaiyanjali Tiruvannamalai Ramanasram ,Tiruvannamalai ,Lord ,Tiruvannamalai Ramanasram ,Mahan ,Maharishi ,Thiruchuzhi ,Madurai ,Isaiyanjali Tiruvannamalai Ramanasramam ,
× RELATED திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் 500 பெண்களுக்கு சேலை