×

கிரைஸ்ட் கிங் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 98% மாணவர்கள் தேர்ச்சி

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த மணவாளநகரில் உள்ள கிரைஸ்ட் கிங் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 2023 – 24ம் ஆண்டில் நடைபெற்று முடிந்த 12ம் வகுப்பு பொது தேர்வில் பள்ளி மாணவர்கள் 98 சதவிகித மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் சூர்யா என்ற மாணவர் 600க்கு 533 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், எம்.தவல் என்ற மாணவன் 600க்கு 505 மதிப்பெண்கள் பெற்று 2ம் இடத்தையும், பி.மதுமிதா என்ற மாணவி 600க்கு 485 மதிப்பெண்கள் பெற்று 3வது இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

மேலும் வி.பவதாரணி – 476ம், ஆர்.நவதீப் – 453, டி.விகாஷ் – 451, எஸ்.பாவனா – 445, எஸ்.அனிசா – 444ம், இ.கெனிதேஜல் – 438 எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் கணினி அறிவியல் பாடத்தில் ர.நவதீப் என்ற மாணவர் 100க்கு 100 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார். அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ, மாணவிகளையும், இதற்கு காரணமான ஆசிரியர்களையும் பள்ளி தாளாளர் ஞா.தன்ராஜ், முதல்வர் ஜூடியத் டேனியல் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

The post கிரைஸ்ட் கிங் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 98% மாணவர்கள் தேர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Christ King Matriculation School ,THIRUVALLUR ,CHRIST KING MATRICULATION SECONDARY SCHOOL ,MANAVALANAGAR, THIRUVALLUR ,Surya ,
× RELATED திருவள்ளூரில் பெயிண்ட்...