திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சட்டம், ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஆய்வு கூட்டம் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக ஆய்வுக் கூட்டம், போதை பொருட்கள் தடுப்பு குறித்து ஒருங்கிணைப்பு குழு ஆய்வுக் கூட்டம், காவல் நிலையங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் தலைமை வகித்தார். காவல் கண்காணிப்பாளர் ரா.நிவாச பெருமாள், ஆவடி துணை காவல் கண்காணிப்பாளர் ஐமன் ஜமால், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இராஜ்குமார், பொன்னேரி தொகுதி எம்எல்ஏ துரை சந்திரசேகர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில், பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் உள்ள கடைகளில் காவல் துறையினர்கள் ஆய்வு மேற்கொள்ளும்போது போதைப் பொருட்கள் விற்பனை செய்வதை கண்டறியப்பட்டால் கடையின் மீது நடவடிக்கை மேற்கொண்டு கடைகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். அனைத்து காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் நன்றாக பயன்பாட்டில் உள்ளதா என்பது குறித்தும் சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்தும் ஆய்வு கூட்டத்தில் நுகர்வோர் பாதுகாப்பு உறுப்பினர்களிடம் மாவட்டத்தில் உள்ள ஏதேனும் குறைபாடுகள் குறித்து புகார் தெரிவிக்க வேண்டும். பொதுமக்களின் புகார் மனுக்கள் மீது உடனடியாக துறை ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
இவ்வாறு தெரிவித்தனர். இதில் பொன்னேரி சப் கலெக்டர் வாகே சங்கத் பல்வந்த், உதவி கலெக்டர் (பயிற்சி) ஆயுஷ் குப்தா, கோட்டாட்சியர்கள் (திருவள்ளூர்) கற்பகம், (திருத்தணி) தீபா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் வெங்கட்ராமன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
The post திருவள்ளூர் கலெக்டர் தலைமையில் சட்டம், ஒழுங்கு ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.