- கேரளா
- மீயெகூர்
- ஆவடி
- பொலிஸ் ஆணையாளர்
- ஷங்கர்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தடை அமலாக்க பிரிவு
- ஆவதி காவல் ஆணையர்
- தின மலர்
பொன்னேரி: மீஞ்சூரில் கஞ்சா கடத்தி வந்த கேரள வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். போதைப்பொருள் இல்லா தமிழகம் என்ற கோட்பாட்டை வலியுறுத்தி ஆவடி காவல் ஆணையர் சங்கர் உத்தரவின் பேரில், ஆவடி காவல் ஆணையரகம் மதுவிலக்கு அமல் பிரிவு உதவி ஆணையர் அசோகன் மேற்பார்வையில், செங்குன்றம் மதுவிலக்கு அமல் பிரிவு ஆய்வாளர் மலர்செல்வி தலைமையில், உதவி ஆய்வாளர் சந்தோஷ் குமார், செங்குன்றம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் மீஞ்சூர் பேருந்து நிலையத்தில் நேற்று முன்தினம் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் ஸ்கூல் பேக் போன்ற பை வைத்துக்கொண்டு சுற்றித்திரிந்த வாலிபரை போலீசார் பிடித்து சோதனை செய்தனர். அவர் வைத்திருந்த பேக்கில் 5 கிலோ சிறு சிறு கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அந்த நபரை காவல்நிலையம் அழைத்து வந்து விசாரித்ததில், அவர் கேரளாவைச் சேர்ந்த அப்துல்நசீர்(29) என்று தெரியவந்தது. தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அப்துல்நசீரை பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
The post கஞ்சா கடத்திய கேரள வாலிபர் கைது appeared first on Dinakaran.