×

பாஜ தலைவர்கள் கண் மருத்துவரை பார்க்க வேண்டும்: ப.சிதம்பரம் விமர்சனம்

புதுடெல்லி: காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை விமர்சித்து பாஜ தலைவர்கள் கண் மருத்துவரை சென்று பார்க்க வேண்டும் என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் தலைவரான ப.சிதம்பரம் கூறுகையில், காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் செல்வம் பற்றிய பின்வரும் வாக்குறுதிகள் உள்ளன. விரைவான வளர்ச்சி மற்றும் செல்வத்தை உருவாக்குவதற்கு காங்கிரஸ் உறுதிபூண்டுள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தியை இரட்டிப்பாக இலக்கு நிர்ணயித்துள்ளோம். செல்வத்தினை உருவாக்குவது என்பதை செல்வத்தினை பகிர்ந்தளிப்பது என்று பாஜ தலைவர்கள் படித்தால் அவர்கள் மீண்டும் நடுநிலை பள்ளிக்கு தான் செல்ல வேண்டும் அல்லது கண் மருத்துவரை சென்று பார்க்க வேண்டும்” என்றார்.

The post பாஜ தலைவர்கள் கண் மருத்துவரை பார்க்க வேண்டும்: ப.சிதம்பரம் விமர்சனம் appeared first on Dinakaran.

Tags : BJP ,P Chidambaram ,New Delhi ,Baj Chidambaram ,Congress ,P. Chidambaram ,preparation committee ,
× RELATED அகில இந்திய தேர்வுகளை ஒன்றிய அரசே தான்...