×

காங்கிரஸ் வேண்டுகோளை ஏற்று இந்தூரில் நோட்டாவுக்கு ஓட்டா? பதறும் பா.ஜ

இந்தூர்: மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூர் தொகுதியில் வரும் 13ம் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தொகுதியில் பாஜ சார்பில் சங்கர் லால்வானி, காங்கிரஸ் சார்பில் அக்சய் காந்தி பாம் உள்ளிட்ட 15 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். கடந்த வாரம் காங்கிரஸ் வேட்பாளர் அக்சய் காந்தி போட்டியில் இருந்து விலகுவதாக திடீரென அறிவித்தார். போட்டியில் இருந்து விலகிய அக்சய் காந்தி பாஜவில் இணைந்துள்ளார். முக்கிய எதிர்க்கட்சி இல்லாமல் அந்த தொகுதியில் தேர்தல் நடப்பதால் பாஜவுக்கு பாடம் கற்பிக்கும் வகையில் தொகுதி மக்கள் அனைவரும் நோட்டாவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று காங்கிரஸ் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்நிலையில், காங்கிரசுக்கு போட்டியாக, தேர்தலில் அதிகப்படியான வாக்குப்பதிவை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பாஜ அறிவித்துள்ளது. இது குறித்து மபி துணை முதல்வர் ஜெகதீஷ் தேவ்டா கூறுகையில்,‘‘ பாஜ ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில், தொகுதியில் அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் பாஜ வேட்பாளர் வெற்றி பெற செய்ய வேண்டும் என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.அந்த தொகுதியில் அதிக ஓட்டு வித்தியாசத்தில் பாஜ வெற்றி பெறுவதற்கு அங்கு உள்ள மக்கள் அதிகளவு வந்து தங்கள் வாக்குகளை பதிவு செய்ய தொண்டர்கள் மூலம் ஊக்குவிக்கப்படும் என்றார் முன்னாள் சபாநாயகர் சுமித்ரா மகாஜன், ‘‘இந்தூர் தொகுதியை நாட்டிலேயே அதிக வாக்கு பதிவு நடந்த தொகுதி என்ற சாதனையை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம்’’ என்றார்.

The post காங்கிரஸ் வேண்டுகோளை ஏற்று இந்தூரில் நோட்டாவுக்கு ஓட்டா? பதறும் பா.ஜ appeared first on Dinakaran.

Tags : Congress ,Indore ,B.J. ,Madhya Pradesh ,Shankar Lalwani ,BJP ,Akshay Gandhi Bam ,Dinakaran ,
× RELATED காவிரி பிரச்னையில் காங்கிரஸ் தலைமை தலையிட திருமாவளவன் வலியுறுத்தல்