சென்னை, மே 6: நடுரோட்டில் காவலரை போதை ஆசாமி தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த காவல் ஆணையர் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார். இந்நிலையில் வாலிபர் ஒருவர் கஞ்சா போதையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ஈடுபட்டதல், அவரை காவலர் ஒரு கண்டித்துள்ளார்.
அப்போது, போதையில் இருந்த அந்த வாலிபர், சாலையில் கிடந்த கல்லை எடுத்து காவலரை தாக்கும் காட்சி சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. போலீசார் விசாரணையில், அந்த நபர் ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த லோகேஷ் (19) என்பதும், இவர் கரையான்சாவடி பகுதியில் உள்ள நிறுவனத்தில் பால் பாக்கெட் பேக்கிங் செய்து வருவது தெரியவந்தது. நேற்று முன்தினம் மாலை இவர் கஞ்சா போதையில், சாலையில் செல்லும் நபர்களை கட்டையால் தாக்க முயன்றுள்ளார்.
இதை பார்த்த அப்பகுதி மக்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில், ஆவடி காவல் நிலையத்தில் பணிபுரியும் தலைமை காவலர் சரவணன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று போதை ஆசாமியை கண்டித்த போது, காவலரையும் கல்லால் தாக்கியுள்ளார். இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார், காவல் நிலையம் அழைத்து வந்து அவர் மீது சிறு வழக்கு பதிவு செய்து அனுப்பி வைத்தனர்.
The post நடுரோட்டில் காவலரை தாக்கிய போதை ஆசாமி: வீடியோ வைரல் appeared first on Dinakaran.