- கரூர் டோல்கேட்
- கரூர்
- கரூர் சுங்ககாட்
- Thanthonimalai
- தந்தோன்மலை
- மணப்பாறை
- திண்டுக்கல்
- கரூர் திருச்சி பைபாஸ் ரோடு
- தின மலர்
கரூர், மே. 6: கரூர் சுங்ககேட், தாந்தோணிமலை வழியாக பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் ஆர்ச் அருகே நின்று செல்வதால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. கரூரில் இருந்து தாந்தோணிமலை, மணப்பாறை, திண்டுக்கல், கரூர் திருச்சி பைபாஸ் சாலை போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் சுங்ககேட், தாந்தோணிமலை வழியாக சென்று வருகிறது. இந்நிலையில், சுங்ககேட் அருகே தாந்தோணிமலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயில் ஆர்ச் உள்ளது. இதனை தாண்டி அனைத்து பஸ்களும் நின்று பயணிகளை ஏற்றிச் செல்லும் வகையில் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது.
ஆனால், கரூரில் இருந்து தாந்தோணிமலை போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பஸ்களில் குறிப்பாக மினிபஸ் போன்றவை ஆர்ச் அருகேயே நின்று பயணிகளை இறக்கி ஏற்றிச் செல்வதால் சற்று தூரத்தில் பஸ்காக காத்திருக்கும் பயணிகள் ஓடி வந்து ஏறும் நிலை உள்ளது. நிழற்குடைக்கு முன்னதாகவே, ஆர்ச் அருகே பஸ்கள் நிற்பதால் பிற வாகனங்கள் முன்னேறிச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு இந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டு வருகிறது.
எனவே, சம்பந்தப்பட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள், அனைத்து பஸ்களும் நிழற்குடை அருகே நின்று பயணிகளை ஏற்றிச் செல்லும் வகையில் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் கோரிக்கை வைத்துள்ளனர். கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் 1200 மாணவ, மாணவிகளும், வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 736 மாணவ, மாணவிகளும் என மொத்தம் இரண்டு மையங்களில் 1936 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர்.
The post கரூர் சுங்ககேட்டில் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு appeared first on Dinakaran.