- ராகுல்
- காங்கிரஸ்
- திரிணமுல்
- அபிஷேக் பானர்ஜி
- கொல்கத்தா
- மேற்கு வங்கம்
- மக்களவை
- பாஜக
- திரிணாமூல் காங்கிரஸ்
- கம்யூனிஸ்ட்
- தின மலர்
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் காங்கிரசுடன் கூட்டணி வைக்க ஆர்வமாக இருந்தோம் என்று அபிஷேக் பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் உள்ள 42 மக்களவை தொகுதிகளுக்கு 7 கட்டமாக தேர்தல் நடக்கிறது. இங்கு பாஜ, திரிணாமுல் காங்கிரஸ் தனித்தனியாகவும் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டாகவும் போட்டியிடுகின்றன.
3 முனை போட்டி நடக்கும் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரசுடன் சேர்ந்து வலிமையான கூட்டணி அமைக்க காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் கடுமையாக முயன்றன. இறுதியில் கூட்டணி முயற்சி தோல்வி அடைந்து 42 தொகுதிகளுக்கு திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி வேட்பாளர்களை அறிவித்தார். இந்நிலையில்,முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகனும் திரிணாமுல் எம்பியுமான அபிஷேக் பானர்ஜி நேற்று கூறுகையில்,‘‘
மாநில காங்கிரஸ் தலைவர் ஆதிர்ரஞ்சன் சவுத்ரி எங்கள் கட்சியை தொடர்ந்து விமர்சித்து வந்த போதிலும் காங்கிரசுடன் கூட்டணி வைக்கவே விரும்பினோம். ஆதிர்ரஞ்சனின் கருத்துகளுக்கு பதிலளிக்காமல் டிசம்பர் வரை காத்திருந்தோம். காலை 6 மணிக்கே டெல்லியில் ராகுல் காந்தியின் வீட்டுக்கு சென்று அவரை சந்தித்து பேசினேன். மாநில காங்கிரஸ் தலைவர் தொடர்ந்து கட்சியை பற்றி விமர்சித்து வந்ததால்தான் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது’’ என்றார்.
The post காலை 6 மணிக்கே ராகுலை சந்தித்தேன் காங்.குடன் கூட்டணி வைக்க விரும்பினோம்: திரிணாமுல் எம்பி அபிஷேக் பானர்ஜி தகவல் appeared first on Dinakaran.