×

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் ஊடகத்துறை நிர்வாகிகள் கூட்டம்

திருச்சி, மே.5: திருச்சியில் நடந்த மாநகர், மாவட்ட காங்கிரஸ் தகவல் தொழில்நுட்பம், ஊடகத்துறை நிர்வாகிகள் கூட்டத்தில், நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஊடகத்துறை சார்பில் நிர்வாகிகள் கூட்டம் கட்சி அலுவலகமான அருணாச்சலம் மன்றத்தில் நேற்று நடந்தது.

கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ரெக்ஸ் தலைமை வகித்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுசாமி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் ஊடகப்பிரிவு மாநில இணை தலைவர் ஜான் அசோக் வரதராஜ் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில், மாவட்ட பொருளாளர் முரளி, கோட்டத் தலைவர்கள் ஜெயம் கோபி ,வெங்கடேஷ் காந்தி, மணிவேல், ஊடகப் பிரிவு மாவட்ட தலைவர் செந்தில், ஐடி பிரிவு லோகேஷ், விஜயகுமார், மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவி ஷீலா செலஸ், மாணவர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் நரேன், இலக்கிய அணி தலைவர் பத்மநாபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கலந்துரையாடினர். ஊடக பிரிவு தலைவர் செந்தில்குமார் நன்றி தெரிவித்தார்.

நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் மறைவிற்கு திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

The post திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் ஊடகத்துறை நிர்வாகிகள் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Trichy District Congress Media Executives ,Trichy ,Nellai East District Congress ,President ,District Congress Information Technology ,Media Department ,Information Technology and ,Trichy District Congress Committee ,Trichy District Congress Media Department Executives Meeting ,Dinakaran ,
× RELATED நெல்லை காங்., தலைவர் மர்ம மரணம்...