×

உத்தரகாண்டில் ₹130 கோடி கிரிப்டோகரன்சி பறிமுதல்

புதுடெல்லி: உத்தரகாண்டில் உள்ள ஹல்த்துவானியை சேர்ந்த பர்விந்தர்சிங், அவரது சகோதரர் பன்மீத் சிங் மற்றும் சிலர் சேர்ந்து சிங் டிடிஓ என்ற பெயரில் சர்வதேச போதை கடத்தல் குழுவை நடத்தி வந்துள்ளனர். ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் போதை பொருட்களை கடத்தியுள்ளனர். கடத்தல் கும்பல் மீது நடவடிக்கை எடுக்கும்படி அமெரிக்க அதிகாரிகள் இந்தியாவுக்கு கோரிக்கை விடுத்தனர். இதை தொடர்ந்து கடந்த மாதம் 27ம் தேதி பர்விந்தர் சிங் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி ரூ.130 கோடி மதிப்புள்ள கிரிப்டோகரன்சியை பறிமுதல் செய்தனர். அமெரிக்க அதிகாரிகள் ஏற்கனவே ஆயிரக்கணக்கான கோடி கிரிப்டோகரன்சியை பறிமுதல் செய்துள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post உத்தரகாண்டில் ₹130 கோடி கிரிப்டோகரன்சி பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Uttarakhand ,NEW DELHI ,Parvinder Singh ,Haldwani ,Panmeet Singh ,Singh ,DTO ,America ,
× RELATED உத்தரகாண்ட் தேசிய நெடுஞ்சாலை தப்ரானி...