×
Saravana Stores

மாவட்டத்தில் 4 மையங்களில் இன்று நீட் தேர்வு

 

திருப்பூர், மே 5: தேசிய தேர்வு முகமை சார்பில் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு இன்று நடைபெறுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் தேசிய தேர்வு முகமை சார்பில் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு 4 தேர்வு மையங்களில் நடைபெறுகிறது. இதற்காக வித்யாசாகர் பப்ளிக் பள்ளியில் 720 பேரும், ஏ.வி.பி கல்லூரியில் 720 பேரும், லிட்டில் கிங்டம் பள்ளியில் 672 பேரும், கே.எம்.சி பப்ளிக் பள்ளியில் 507 பேரும் என மொத்தம் 2 ஆயிரத்து 619 மாணவ, மாணவிகள் நீட் தேர்வு எழுதுகிறார்கள்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 2 மணிக்கு தொடங்கி மாலை 5.20 மணிக்கு முடிகிறது. தேர்வு மையங்களில் தடையில்லா மின்சாரம், ஒவ்வொரு தேர்வு மையத்திலும் மருத்துவக்குழு, ஆம்புலன்ஸ் வசதி, சுகாதார ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்வு மையத்துக்கு மாணவர்கள் இடையூறு இல்லாமல் வந்து செல்வதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொடுக்குமாறு மாநகர் மற்றும் மாவட்ட போலீசாரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு மையத்தில் பெற்றோருக்கு காத்திருப்பு பகுதி, வாகன நிறுத்துமிட வசதிகள், உணவு, குடிநீர் போன்ற அத்தியாவசிய தேவைகள் அனைத்தையும் கவனத்தில் கொண்டு மாணவர்கள் நல்ல மனநிலையில் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முழுக்கை சட்டை அணிய கூடாது, மாணவிகள் தலையில் பூ வைக்க கூடாது, தங்கநகை ஆபரணங்கள் அணிந்திருக்க கூடாது, அலைபேசிகள் எடுத்து செல்ல தடை, தெளிவாக தெரியும் வகையில் தண்ணீர் பாட்டில் எடுத்து செல்லலாம், எலக்ட்ரானிக் சாதனங்கள் எதையும் எடுத்து செல்ல முடியாது. காலணி அணியவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

The post மாவட்டத்தில் 4 மையங்களில் இன்று நீட் தேர்வு appeared first on Dinakaran.

Tags : Tirupur ,NEET ,National Examination Agency ,Vidyasagar ,Dinakaran ,
× RELATED கேள்வித்தாள் வெளியானதால் மாற்றப்பட்ட...