- சுந்தரேஷ்வரர்
- சுவாமி கோயில்
- கும்பாபிஷேக் விழா
- கண்ணமங்கலம்
- சாந்தவாசல்
- சமேத சுந்தரேஸ்வர சுவாமி கோவில்
- சந்தவாசல் வடிவாம்பிகை
- போ பூஜா
- கஜ பூஜை
- கணபதி
- மகாலட்சுமி ஹோமம்
- யாகசாலை
கண்ணமங்கலம், மே 4: கண்ணமங்கலம் அடுத்த சந்தவாசல் வடிவாம்பிகை சமேத சுந்தரேஷ்வர சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நேற்று வெகு விமரிசையாக நடந்தது. விழாவையொட்டி காலையில் கோ பூஜை, கஜ பூஜை, கணபதி, மகாலட்சுமி ஹோமம், யாகசாலை பூஜை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து யாகசாலையிலிருந்து கலசம் எடுத்து செல்லப்பட்டு, மூலவர் மற்றும் கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தின் போது வானில் கருடன் வட்டமிட்டப்படி பறந்ததை பார்த்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பார்த்து மகிழ்ச்சியடைந்தனர். அப்பகுதிகளில் எங்குமே கருடன் இல்லாத நிலையில் கும்பாபிஷேக நேரத்தில் மட்டும் கருடன் வானில் வட்டமிட்டது பக்தர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. இரவு மின்விளக்குகளால் அலங்கரிக்கபட்ட வாகனத்தில் பேண்டு வாத்தியங்கள், வாணவேடிக்கை முழங்க சுவாமி திருவீதி உலா நடந்தது. இதேபோல் சந்தவாசல் புஷ்பகிரி திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேகமும், அக்னி வசந்த விழா தொடக்க விழாவிழாவும் நேற்று நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
The post சுந்தரேஷ்வர சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா வானில் கருடன் பறந்ததால் பக்தர்கள் பக்தி பரவசம் கண்ணமங்கலம் அடுத்த சந்தவாசல் appeared first on Dinakaran.