×

துபாயில் இருந்து கடத்தி வந்த ₹49 லட்சம் தங்கம் பறிமுதல்

அவனியாபுரம், மே 4: துபாயில் இருந்து விமானத்தில் ₹49 லட்சம் மதிப்புள்ள தங்கம் கடத்தி வந்த நாகப்பட்டினம் வாலிபர் சிக்கினார். துபாயில் இருந்து மதுரை வரும் விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து மதுரை வான் நுண்ணறிவு பிரிவு சுங்க இலாகாவினர் நேற்று காலை துபாயில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு வந்த பயணிகளின் உடைமைகளை தீவிர சோதனை செய்தனர். அப்போது நாகப்பட்டினத்தை சேர்ந்த முகமது அபுபக்கர் (33) என்பவரது நடவடிக்கைகள் சந்தேகத்திற்குரிய வகையில் இருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து அவரது உடமைகளை சோதனை செய்தனர். அப்போது அவரிடமிருந்து 812 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டது. இவற்றின் மதிப்பு ₹48 லட்சத்து 78 ஆயிரம் ஆகும். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post துபாயில் இருந்து கடத்தி வந்த ₹49 லட்சம் தங்கம் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Dubai ,Avaniyapuram ,Nagapattinam ,Madurai ,Dinakaran ,
× RELATED துபாய் நாட்டில் மண்ணிட்டு மூடிய...