கரூர், மே 4: கடந்த இரண்டு மாதங்களாக கோடை வெயில் தமிழகம் முழுதும் உச்சத்தில் உள்ளது. குறிப்பாக, கரூர் மாவட்டத்தில் இதன் தாக்கம் மேலும் அதிகளவு உள்ளது. இன்று முதல் தமிழகம் முழுதும் அக்னி நட்சத்திர வெயில் துவங்கவுள்ளது. சுட்டெரிக்கும் வெயிலை சமாளிக்கும் வகையில், பொதுமக்கள், குளிர்பான கடைகளில் முகாமிட்டு, வெப்பத்தை சமாளித்து வருகின்றனர். இதே போல், கருர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் இளநீர் விற்பனையும் அதிகரித்த நிலையில் உள்ளது. வழக்கமாக விற்பனை செய்யப்படும் இடங்களைத் தவிர, கூடுதலாக பல்வேறு பகுதிகளிலும் வியாபாரிகளால் இளநீர் விற்பனை நடத்தப்பட்டு வருகிறது. கோவை மாவட்டம் பகுதிகளில் இருந்து இளநீர் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கோடையை சமாளிக்கும் திறன் கொண்ட இயற்கை பானமாக கருதப்படும் இளநீரை பொதுமக்களும் ஆர்வத்துடன் வாங்கி பருகி வருகின்றனர் என்பதால், கருர் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் இளநீர் விற்பனை தற்போது அதிகரிக்க துவங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
The post கடனுதவி வழங்க விவசாயிகள் கோரிக்கை கோடையின் தாக்கம் காரணமாக இளநீர் விற்பனை அதிகரிப்பு appeared first on Dinakaran.