×
Saravana Stores

தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றி சரியான முறையில் தண்ணீர் பந்தல் செயல்பாடுகள்: பெரம்பலூர் கலெக்டர் உத்தரவு

 

பெரம்பலூர்,மே.4: பெரம்பலூர் மாவட்டத்தில்தேர்தல் நடத்தைவிதிகளை பின்பற்றி சரியான முறை யில் தண்ணீர் பந்தல் செயல்பாடுகள் நடைபெற வேண்டும் என பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் கற்பகம் உத்தரவிட்டார். இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது:  தண்ணீர்பந்தல் (தாகமுள்ள மக்களுக்கு இலவச தண்ணீர் விநியோகம்) திறப்பதற்கான அரசியல் கட்சிகளின் முன்மொழி வின் அடிப்படையில், புது டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தின் தேர்தல் நடத்தை விதிகளின் அடிப்படையில் முன்மொழியப்பட்ட முன் மொழிவுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை எனத் தெரிவித்துள்ளது.

எந்த ஓர் அரசியல் கட்சியும், வேட்பாளரும் இந்தச் செயல்பாட்டின் மூலமாக எவ்விதத்திலும் அரசியல் ரீதியாக பயன்பெறக் கூடாது எனவும், தண்ணீர் பந்தல் திறப்பின் போது தேர்தல் நடத்தை விதிகள் கண்டிப்பாகக் கடைப்பிடிக் கப்படவேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. எனவே, தண்ணீர்பந்தல் திறக்க விரும்பும் எந்தவொரு அர சியல் கட்சியும், வேட்பாள ரும் ஆணையத்தின் மேற் கண்ட வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு, சுகாதாரம், தூய்மையான குடிநீர் தொ டர்பானஅரசாங்கத்தின் பிற அறிவுறுத்தல்களைக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும், அவர்களின் கோரிக்கையின் அடிப்படையிலும்தேர்தல் நடத்தைவிதிகளை பின்பற்றவும் அனுமதிக்கப் படுகிறது.தேர்தல் நடத்தை விதிகளைப் பின்பற்றி சரி யான முறையில் தண்ணீர் பந்தல் செயல்பாடுகள் நடைபெற வேண்டும் என மாவட்டக் கலெக்டர் வெளி யிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

The post தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றி சரியான முறையில் தண்ணீர் பந்தல் செயல்பாடுகள்: பெரம்பலூர் கலெக்டர் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Perambalur ,Perambalur District ,Collector ,Karpagam ,
× RELATED போதைக்கு எதிராக எஸ்பி விழிப்புணர்வு