×

திருச்சுழி அருகே பொதுமக்களுக்கு நீர்மோர் பந்தல்: அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்தார்

 

திருச்சுழி, மே 4: திருச்சுழி அருகே பொதுமக்கள், பயணிகளுக்காக நீர்மோர் பந்தலை அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்தார். தமிழகத்தில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருப்பதால் பொதுமக்களுக்கு உதவிடும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுகவினர் பொதுமக்களுக்காக நீர்மோர் பந்தல்கள் அமைக்க உத்தரவிட்டிருந்தார்.

அதன்பேரில் விருதுநகர் வடக்கு மாவட்ட திமுக சார்பில் திருச்சுழி, நரிக்குடி, காரியாபட்டி ஆகிய பகுதிகளில் நீர்மோர் பந்தல்கள் அமைக்க வேண்டும் எனவும், பொதுமக்கள் அதிகப்படியாக கூடும் இடங்களில் திமுக சார்பில் நீர்மோர் பந்தல் அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் அமைச்சர் தங்கம் தென்னரசு நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். இதையடுத்து திமுகவினர் அனைத்து பகுதிகளிலும் மக்கள் கூடும் இடங்களில் நீர்மோர் பந்தல்களை திறந்து வருகின்றனர்.

திருச்சுழி தெற்கு ஒன்றிய சார்பில் கமுதி மற்றும் சாயல்குடி, அருப்புக்கோட்டை ஆகிய ஊர்களுக்கு செல்லும் க.விலக்கு முச்சந்திப்பு பகுதியில் ஏற்பாடு செய்யபட்டிருந்த நீர் மோர் பந்தலை அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்தார். பொதுமக்கள் மற்றும் பயணிகளுக்கு தர்பூசணி, நீர் மோர் வழங்கினார். நிகழ்ச்சியில் ஒன்றிய தலைவர் பொன்னுத்தம்பி உள்பட திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

The post திருச்சுழி அருகே பொதுமக்களுக்கு நீர்மோர் பந்தல்: அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Neermore Pandal ,Thiruchuzhi ,Minister ,Thangam Tennarasu ,Nemor Pandal ,Chief Minister ,M. K. Stalin ,DMK ,Tamil Nadu ,
× RELATED திருச்சுழி-உடையானம்பட்டி இடையே...