புவனேஸ்வர்: ஜனநாயகத்தின் மீது தொடர் தாக்குதல் நடத்தி வரும் பாஜ மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் அரசியல் சட்டத்தை அழிக்க விரும்புகின்றனர் என ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். ஒடிசா மாநிலம், ராயகட்டாவில் நேற்று நடக்கவிருந்த காங்கிரஸ் தேர்தல் பிரசார கூட்டத்தில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்பதாக இருந்தது. ரேபரேலி தொகுதியில் வேட்புமனுதாக்கல் செய்வதற்காக கடைசி நேரத்தில் தன்னுடைய பயணத்தை நேற்று ரத்து செய்தார்.ஒடிசா தேர்தல் பிரசாரத்தையொட்டி ராகுல் காந்தி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில், மோடி,பாஜ, ஆர்எஸ்எஸ் அமைப்பினர் ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு சட்டத்தின் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். காங்கிரஸ், இந்தியா கூட்டணியினர் ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் பாதுகாக்க போராடுகின்றனர். ஆனால்,பாஜ, ஆர்எஸ்எஸ் அதை அழிக்க நினைக்கின்றன. இதனால் 2024 தேர்தல் மிகவும் முக்கியமானதாகும்.பழங்குடியினரை அவர்கள் அவமதிக்கின்றனர்.காடு,நிலம்,நீர் ஆகியவற்றில் பழங்குடியினருக்கான உரிமையை காங்கிரஸ் வழங்கும்.காங்கிரஸ் ஆட்சியில் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. மோடி அரசு பெரும் தொழிலதிபர்களின் ரூ.16 லட்சம் கோடியை தள்ளுபடி செய்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
The post ஜனநாயகத்தின் மீது தொடர் தாக்குதல் நடத்தி அரசியல் சட்டத்தை அழிக்க பாஜ, ஆர்எஸ்எஸ் முயற்சி: ராகுல் காந்தி கடும் தாக்கு appeared first on Dinakaran.