×
Saravana Stores

கும்பகோணம் அருகே சாக்கோட்டையில் கள்ளநோட்டு மாற்ற முயன்றபோது தப்பி ஓடியவர் கைது..!!

தஞ்சை: கும்பகோணம் அருகே சாக்கோட்டையில் கள்ளநோட்டு மாற்ற முயன்றபோது தப்பி ஓடியவர் திருப்பூரில் கைது செய்யப்பட்டார். சுருளிராஜன் ரூபாய் நோட்டுகளை கலர் ஜெராக்ஸ் எடுத்து புழக்கத்தில் விட்டுள்ளதாக போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட சுருளிராஜனிடம் இருந்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. கடந்த 27ம் தேதி இரவு சாக்கோட்டையில் கள்ளநோட்டை மாற்ற முயன்ற சுருளிராஜன் தப்பி ஓடினார்.

The post கும்பகோணம் அருகே சாக்கோட்டையில் கள்ளநோட்டு மாற்ற முயன்றபோது தப்பி ஓடியவர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Chakkottai ,Kumbakonam ,Thanjavur ,Tirupur ,Surulirajan ,
× RELATED தவறான மின் இணைப்பு ரூ.71,543 அபராதம் வசூலிப்பு