×

சித்திரை மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி

வத்திராயிருப்பு: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு பிரதோஷம் மற்றும் பவுர்ணமியையொட்டி பக்தர்கள் மலை ஏறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படுவது வழக்கம். அதன்படி, சித்திரை மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) முதல் 8-ந் தேதி வரை 4 நாட்கள் வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகத்தினர் அனுமதி அளித்துள்ளனர்.

மேலும் பக்தர்கள் கோவிலில் இரவில் தங்க அனுமதி கிடையாது. தடை செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களை மலைக்கு கொண்டு செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். அனுமதிக்கப்பட்ட நாட்களில் திடீரென மழை பெய்தால் பக்தர்களின் பாதுகாப்பு கருதி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்படும் எனவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். பிரதோஷம் மற்றும் அமாவாசை வழிபாட்டிற்கு தேவையான ஏற்பாட்டினை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

The post சித்திரை மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி appeared first on Dinakaran.

Tags : Chaturagiri temple ,Chaturagiri Sundara ,Mahalingam Temple ,Western Ghats ,Sami ,Pradosha ,Chitrai ,
× RELATED சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு 5 நாள் அனுமதி