×

பேராவூரணி நீதிமன்றத்திற்கு கட்டிடம் கட்ட இடம்

பேராவூரணி, மே 3: பேராவூரணி நீதிமன்றத்திற்கு சொந்தமாக கட்டிடம் கட்ட இடம் தேர்வு செய்ய சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளை நீதிபதி சுரேஷ்குமார் நேற்று ஆய்வு செய்தார். பேராவூரணியில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் கடந்த இரண்டு ஆண்டுகளாக தாசில்தார் அலுவலக வளாகத்தில் உள்ள வேளாண்துறைக்கு சொந்தமான கட்டிடத்தில் இயங்கி வருகிறது. நீதிமன்றத்திற்கு பல்வேறு தரப்பினரும் சொந்த கட்டிடம் கட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்த நிலையில் ,புதிய கட்டிடம் கட்டுவதற்கான இடத்தை ஆய்வு செய்ய வருகை தந்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி சுரேஷ்குமார் தாலுக்கா அலுவலக வளாகத்தில் உள்ள காலியிடம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம் பூக்கொல்லை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே உள்ள இடங்களை ஆய்வு செய்தார். ஆய்வின்போது தொழிலாளர் நீதிமன்ற மாவட்ட நீதிபதி ஜெசிந்தா மார்ட்டின், பட்டுக்கோட்டை ஆர்டிஓ ஜெய, மூன்றாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி மணி, மாவட்ட உரிமையியல் நீதிபதி ரவிச்சந்திரன், மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் அழகேசன், தாசில்தார் தெய்வானை, பார் கவுன்சில் செயலாளர் சிவேதி நடராஜன் மற்றும் வருவாய்த்துறையினர் உடனிருந்தனர்.

The post பேராவூரணி நீதிமன்றத்திற்கு கட்டிடம் கட்ட இடம் appeared first on Dinakaran.

Tags : Peravurani Court ,Peravoorani ,Judge ,Suresh Kumar ,Madurai ,Madras High Court ,Peravoorani court ,Dinakaran ,
× RELATED பேராவூரணி பேரூராட்சியில்