×

கம்பத்தில் சித்திரை திருவிழா மஞ்சள் நீராட்டம்

கம்பம், மே 3: கம்பத்தில் சித்திரை திருவிழாவையொட்டி மஞ்சள் நீராட்டம் நடைபெற்றது. கம்பம் கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கடந்த 16ம் தேதி சாட்டுதல் மற்றும் 17ம் தேதி கொடியேற்றும் வைபவத்துடன் தொடங்கி இரண்டு வாரங்களாக நடைபெற்று வருகின்றது. இதில் நேற்று முன்தினம் முதல், அக்னிசட்டி எடுத்தல், ஆயிரம்கண் பானை, முளைப்பாரி, அலகு குத்தி காவடி எடுத்தல் போன்ற நேர்த்திக் கடன்கள் பக்தர்களால் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

இக்கோயில் விழாவில், பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி பிரசித்தி பெற்றதாகும். நேற்று முன்தினம் நள்ளிரவில், கோயில் முன்பக்கம் அமைக்கப்பட்ட பூக்குழியில், பக்தர்கள் பூக்குழி இறங்கும் வைபவம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து நேற்று காலையில் வேளாளப் பெருமக்கள் சார்பில் மஞ்சள் நீராட்டம் சாமி ஊர்வலத்துடன் நடைபெற்றது. டிராக்டர்களில் நூற்றுக்கணக்கான டிரம்களில் மஞ்சள் நீரை நிரப்பி, நகர் வலம் வந்து மஞ்சள் நீராட்டம் நடைபெற்றது.

The post கம்பத்தில் சித்திரை திருவிழா மஞ்சள் நீராட்டம் appeared first on Dinakaran.

Tags : Gampathil Chitrai Festival Yellow Water ,Gampam ,Chitrai festival ,Gampam Gaumariamman Temple Chitrai Festival ,Gampadhil Chitrai Festival Yellow Niratam ,
× RELATED தேனி மாவட்டம் கம்பம் அரசு மருத்துவமனை...