ஊட்டி, மே 3: ஊட்டி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ எச்.எம்.ராஜூ வயது மூப்பு காரணமாக காலமானார். 1989, 1991 மற்றும் 2001ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு ஊட்டி தொகுதி எம்எல்ஏவாக ராஜூ தேர்வு செய்யப்பட்டார். இவர், வக்கீல் என்பதால், ஊட்டியில் வக்கீல் தொழிலும் செய்து வந்தார். இவர் முன்னாள் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி துணைத்தலைவராகவும் பதவி வகித்தவர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவருமாக இருந்தவர். மிகவும் எளிமையான இவர், அனைத்து மக்களிடமும் சகஜமாக பழக்கூடியவர்.
இந்நிலையில், வயது மூப்பின் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக அரசியிலில் இருந்து விலகி இருந்தார். இந்நிலையில், அவருக்கு 92 வயது ஆன நிலையில், வயது மூப்பின் காரணமாக கோத்தகிரியில் உள்ள தனது கிராமத்தில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார். இவரது இறுதிச் சடங்கு நேற்று நடந்தது. இதில், ஏராளமான காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர். இவரது மறைவிற்கு நீலகிரி மாவட்ட திமுக சார்பில் மாவட்ட செயலாளர் முபாரக் இரங்கல் தெரிவித்துள்ளார்.
The post ஊட்டி காங்கிரஸ் மாஜி எம்எல்ஏ காலமானார் appeared first on Dinakaran.