×
Saravana Stores

உணவுப் பொருட்கள் கடத்தல் தகவல் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிப்பு

கரூர், மே. 3: உணவுப் பொருட்கள் கடத்தல் குறித்து தகவல் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் வகையில் கரூர் மாவட்ட போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், திருச்சி உணவுப் பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்பி அறிவுரையின்பேரில், கரூர் மாவட்டத்தில் உணவுப் பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்கும் வகையில் கட்டணமில்லா தொலைபேசி எண் 18005995950 அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கரூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், எஸ்ஐ கார்த்திக்கேயன் மற்றும் போலீசார், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ் ஸ்டாண்ட், டோல்பிளாசா, ரயில்நிலையம் போன்ற இடங்களில் கட்டணமில்லா தொலை பேசி எண்ணின் சுவரொட்டியை ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நஞ்சை புகளூரில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பணைக்கு அருகில் கிணறு அமைக்கப்பட்டு, காவிரி நீரை எடுத்துச் செல்ல 1,422 மி.மீ விட்டமுள்ள எம்எஸ் குழாய்கள் 50 கிமீ நீளத்திற்கு பதிக்கப்பட்டு, அரவக்குறிச்சியில் அமைக்கப்பட்டு வரும் 135 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்படுவதற்கு நடைபெற்று வரும் பணிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

The post உணவுப் பொருட்கள் கடத்தல் தகவல் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Karur ,
× RELATED கரூர்- முக்கணாங்குறிச்சி இடையே சாலை...