பெரம்பூர்: உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தன. இதனை பயன்படுத்தி வியாசர்பாடி எம்எம் கார்டன் 3வது தெருவில் மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்த அதே பகுதியைச் சேர்ந்த வித்யலட்சுமியை (32) கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 25 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இதேபோல், புளியந்தோப்பு காவல் நிலையத்துக்கு உட்பட்ட வாசுகி நகர் பழைய பாலம் அருகே புளியந்தோப்பு போலீசார் சோதனை செய்தபோது புளியந்தோப்பு நரசிம்மன் நகர் 4வது தெருவைச் சேர்ந்த அஜித்குமார் (28), மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரிடம் இருந்து 20 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் அஜித்குமாரை கைது செய்தனர். அதே பகுதியில் புளியந்தோப்பு வாசுகி நகரைச் சேர்ந்த அமுல் (29) என்பவர் மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்து கொண்டிருந்தார்.
அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 15 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் ஓட்டேரி குன்னூர் ஹைரோடு பகுதியில் ஓட்டேரி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்த ரெட்டேரி பகுதியைச் சேர்ந்த கலைவாணி (45) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 15 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனையடுத்து மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் கலைவாணி மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
The post உழைப்பாளர் தினத்தில் மது விற்ற 4 பேர் கைது appeared first on Dinakaran.