×

தஞ்சை பெருவுடையார் கோயிலை சிதைக்கும் நோக்கில் அறநிலையத்துறை செயல்படுவதாக தவறான செய்தி வெளியிடுவதா? சட்டப்படி நடவடிக்கை என அரசு எச்சரிக்கை

சென்னை: தஞ்சை பெருவுடையார் கோயிலை சிதைக்கும் நோக்கில் இந்து சமய அறநிலையத்துறை செயல்பட்டு வருவதாக தவறான செய்தி வலைத்தளங்களில் வெளியிட்ட நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தஞ்சை பெருவுடையார் திருக்கோயிலின் அடித்தளத்தை அசைக்கும் வகையில் தரைத்தளங்களை உடைத்து இந்து சமய அறநிலையத்துறையால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக காணொலி காட்சி வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அந்த கோயில் ஒன்றிய அரசின் கீழ் உள்ள இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கோயில் பராமரிப்பு பணிகள் அனைத்தும் இந்திய தொல்லியல் துறையினரால் மட்டுமே மேற்கொள்ளப்படும். இந்து சமய அறநிலையத்துறையால் தினசரி பூஜைகள் மற்றும் திருவிழாக்கள் மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சன்னதியின் பின்புறத்தில் உள்ள தரைத்தளம் மேடு பள்ளங்களுடன் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் நடப்பதற்கு சிரமமாக உள்ளதால் தரைத்தளத்தில் பராமரிப்பு பணிகள் இந்திய தொல்லியல் துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், பெருவுடையார் கோயிலை சிதைக்கும் நோக்கில் இந்து சமய அறநிலையத்துறை செயல்பட்டு வருவதாக தவறான செய்தி வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அங்கு நடைபெற்று வரும் பணிகள் குறித்து இந்திய தொல்லியல் துறையின் மூலம் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலைத்துறையின் மீது அவதூறு பரப்பும் வகையில் காணொலி காட்சி வெளியிட்ட நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

The post தஞ்சை பெருவுடையார் கோயிலை சிதைக்கும் நோக்கில் அறநிலையத்துறை செயல்படுவதாக தவறான செய்தி வெளியிடுவதா? சட்டப்படி நடவடிக்கை என அரசு எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Tanjore Peruvudayar temple ,Chennai ,Tamil Nadu government ,Hindu Religious Charities Department ,department ,Tanjore ,Peruvudayar ,temple ,Dinakaran ,
× RELATED பொது இடங்களில் பாலின சார்பற்ற...