சென்னை: மலேசியாவில் கட்டிட வேலை மற்றும் வெல்டர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து அயல் நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் தலைவர் மகேஸ்வரன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: மலேசியாவில் பணிபுரிய குறைந்தபட்சம் 10ம் வகுப்பு அல்லது அதற்கு கீழ் படித்துள்ள, பணி அனுபவம் அல்லது பணி அனுபவம் இல்லாத 50 வயதிற்கு உட்பட்ட கட்டிட வேலை, உதவியாளர் மற்றும் வெல்டர் தேவைப்படுகிறார்கள். இதில் கட்டிட வேலை பணிக்கு ரூ.50,000 ஊதியமாகவும், உதவியாளர் பணிக்கு ரூ.28,000 ஊதியமாக வழங்கப்படும். வெல்டர் பணிக்கு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். இவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.40,000 வழங்கப்படும். மேலும் உணவு, இருப்பிடம் விமான பயணச்சீட்டு மற்றும் விசா வேலை அளிப்பவரால் வழங்கப்படும்.
மேலே குறிப்பிட்டுள்ள பணிகளுக்கு செல்ல விருப்பமுள்ள ஆண் பணியாளர்கள் www.omcmanpower.tn.gov.in என்ற இந்நிறுவன இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும், ovemclnm@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தங்களின் சுய விவர விண்ணப்பப்படிவம், கல்வி, பணி அனுபவ சான்றிதழ் மற்றும் பாஸ்போர்ட் நகலை வருகிற 26ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். கூடுதல் விவரங்களை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன தொலைபேசி எண்கள் (044-22505886/22502267) மற்றும் வாட்ஸ்ஆப் எண் (9566239685) வாயிலாக அறிந்துகொள்ளலாம். அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஒரு அரசு நிறுவனம் என்பதால் இந்த நிறுவனத்தின் கீழ் எந்த ஒரு இடைத்தரகரோ அல்லது ஏஜென்ட்களோ எவரும் இல்லை. ஆகவே விருப்பம் உள்ளவர்கள் நேரடியாகவே இந்நிறுவனத்தை தொடர்பு கொள்ளலாம். இந்த பணிக்கு செல்பவர்கள் விசா கிடைத்த பின்னர் இந்நிறுவனத்திற்கு சேவை கட்டணமாக ரூ.35,400 மட்டும் செலுத்தினால் போதும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post மலேசியாவில் வெல்டர், கட்டிட பணிக்கு விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.