×

கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையில் இணைப்பதை கைவிட வேண்டும்: டிடிவி வலியுறுத்தல்

சென்னை: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்ட அறிக்கை: கள்ளர் சமுதாயத்தினர் கல்வியறிவு பெறவும், சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் உயர்நிலையை அடையவும் தொடங்கப்பட்ட கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையுடன் இணைப்பது தொடர்பாக அரசின் உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடத்தி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள 298 கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளில் 30,000 மாணவர்கள் அரசின் சிறப்பு உதவித்தொகையுடன் பயின்று வரும் நிலையில், அதனை பள்ளிக்கல்வித்துறையுடன் இணைக்கும் நடவடிக்கை மாணவர்களுக்கான சலுகைகளை பறிப்பதோடு, கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் தொடங்கப்பட்டதன் நோக்கத்தையே அடியோடு சீர்குலைப்பதாகும். எனவே, கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளை, பள்ளிக்கல்வித்துறையுடன் இணைக்கும் முடிவை கைவிடுவதோடு, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் துறையின் கீழாகவே தொடர்ந்து இயங்கிட தேவையான நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினை கேட்டுக்கொள்கிறேன்.

The post கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையில் இணைப்பதை கைவிட வேண்டும்: டிடிவி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Kallar ,TTV ,CHENNAI ,AAMUK ,General ,TTV.Thinakaran ,School Education Department ,Dinakaran ,
× RELATED பள்ளி ஆசிரியர்களுக்கு தொல்லியல் பயிற்சி களப்பயணம் மேற்கொண்டனர்