×

திறந்தநிலை பல்கலை தேர்வு முடிவு வெளியீடு

சென்னை: தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக் கழகத்தின் தேர்வு முடிவுகள் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக அப்பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் இறுதி பருவத்தேர்வுகள் கடந்த ஜனவரி 27ம் தேதி முதல் ஏப்ரல் 7ம் தேதி வரை நடந்தன. இளநிலை, முதுநிலை, பட்டயப்படிப்பு, முதுநிலை பட்டயப் படிப்பு மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் மே 1ம் தேதி வெளியிடப்பட்டன. தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ள விரும்புவோர் திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் இணைய தளமான www.tnou.ac.in என்ற இணையத்தில் தெரிந்து கொள்ளலாம். மாணவர்கள் தங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறியலாம்.

The post திறந்தநிலை பல்கலை தேர்வு முடிவு வெளியீடு appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Tamil Nadu Open University ,
× RELATED மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு...