பனாஜி: இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் 10 முதல் 15 மாநிலங்களில் பாஜ தலைமையிலான அரசு கவிழும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா கூறினார். கோவா தலைநகர் பனாஜியில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பவன் கேரா கூறுகையில், ‘‘இந்தியா கூட்டணி ஒன்றியத்தில் ஆட்சிப்பொறுப்பை ஏற்றவுடன் கட்சி தாவலை தடை செய்யும் அரசியலமைப்பின் 10வது அட்டவணையில் திருத்தம் செய்யப்படும். ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்கு யார் மாறினாலும் அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள். ஜூன் 4ம் தேதி முடிவுகள் வெளியானவுடன், 10 முதல் 15 மாநிலங்களில் பாஜ தலைமையிலான அரசு கவிழும். பாஜ நாடு முழுவதும் ஜனநாயகத்தை கேலி கூத்தாக்கியுள்ளது. அமித் ஷா கோவா வரும்போது கட்சி தாவல் தடை செய்யும் அரசியலமைப்பின் 10வது அட்டவணை குறித்து கேள்வி எழுப்ப வேண்டும்” என்றார்.
The post ஜூலை மாதத்திற்குள் 10-15 மாநிலங்களில் பாஜ அரசு கவிழும்: காங். மூத்த தலைவர் பவன் கேரா கணிப்பு appeared first on Dinakaran.