- காங்கிரஸ்
- Chandrasekharara
- இசி
- புது தில்லி
- தேர்தல் ஆணையம்
- முதல் அமைச்சர்
- சந்திரசேகர் ராவ்
- தெலுங்கானா
- பாரத ராஷ்டிர சமிதி
- ஜனாதிபதி
- கே. சந்திரசேகர் ராவ்...
- சந்திரசேகர ரா
- தின மலர்
புதுடெல்லி: காங்கிரசுக்கு எதிராக சர்ச்சை கருத்து தெரிவித்த தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகரராவ் 48 மணி நேரம் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. தெலங்கானா மாநில முன்னாள் முதல்வரும், பாரத் ராஷ்டிர சமிதி தலைவருமான கே. சந்திரசேகரராவ் ஏப்ரல் 5ம் தேதி சிர்சில்லாவில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது காங்கிரஸ் குறித்து அவர் தெரிவித்த கருத்துகள் தேர்தல் மாதிரி நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது என்று புகார் தெரிவிக்கப்பட்டது. இதுபற்றி தேர்தல் ஆணையம் சந்திரசேகரராவிடம் விளக்கம் கேட்டது.
அதற்கு அவர் அளித்த பதிலில்,’ எனது வார்த்தைகள் திரிக்கப்பட்டவை. தெலுங்கு மொழியை தேர்தல் அதிகாரிகளால் புரிந்து கொள்ள முடியாது’ என்று விளக்கம் அளித்து இருந்தார். இதுபற்றி விசாரித்து வந்த தேர்தல் ஆணையம் நேற்று சந்திரசேகரராவ் 48 மணி நேரம் பிரசாரம் செய்ய தடை விதித்து உத்தரவிட்டது. இந்த தடை உத்தரவு நேற்று இரவு 8 மணி முதல் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலாவுக்குப் பிறகு, 48 மணி நேரம் பிரச்சாரம் செய்ய தடை விதிக்கப்பட்ட இரண்டாவது அரசியல்வாதி சந்திரசேகரராவ் ஆவார்.
The post காங்கிரசுக்கு எதிராக கருத்து; சந்திரசேகரராவுக்கு 48 மணி நேர தடை: தேர்தல் ஆணையம் நடவடிக்கை appeared first on Dinakaran.