×
Saravana Stores

மக்களவை தேர்தல்: வெளிநாடுகளை சேர்ந்த 18 அரசியல் கட்சி பிரதிநிதிகள் இந்தியா வருகை


புதுடெல்லி: மக்களவை தேர்தல் குறித்த அனுபவத்தை பெறுவதற்காக வௌிநாட்டை சேர்ந்த 18 அரசியல் கட்சி பிரதிநிதிகள் இந்தியா வருகை தந்துள்ளனர். இந்திய தேர்தல்களில் முதல் முறையாக, இந்திய ஜனநாயக செயல்முறையை நேரில் பார்த்த அனுபவத்தை பெறுவதற்காக வெளிநாட்டு அரசியல் கட்சிகளுக்கு பாஜ அழைப்பு விடுத்தது. இந்த அழைப்பின் பேரில் 10 நாடுகளை சேர்ந்த 18 அரசியல் கட்சி பிரதிநிதிகள் நேற்று இந்தியா வந்தனர். இவர்களுக்கு கட்சியின் தேர்தல் பிரசாரம், அதன் உத்திகள் மற்றும் ஒட்டுமொத்த தேர்தல் செயல்முறை குறித்தும் அவர்களுக்கு விளக்கப்படும். பாஜ தலைவர் நட்டா மற்றும் வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர், அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உட்பட பாஜ தலைவர்களை அவர்கள் நேரில் சந்தித்து கலந்துரையாடுகின்றனர்.

ஆஸ்திரேலியாவின் லிபரல் கட்சி, வியட்நாமின் வியட்நாம் கம்யூனிஸ்ட், வங்கதேசத்தின் அவாமி லீக், இஸ்ரேல் லிகுட் கட்சி பிரதிநிதிகள் இந்தியா வந்துள்ளனர். மேலும் உகாண்டா, தான்சானியா, ரஷ்யா, இலங்கை, மொரீசியஸ், நேபாளம் ஆகிய நாடுகளில் இருந்தும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மக்களவை தேர்தல் நடைமுறை குறித்த அனுபவத்தை பெறுவதற்காக வந்துள்ளனர்.

The post மக்களவை தேர்தல்: வெளிநாடுகளை சேர்ந்த 18 அரசியல் கட்சி பிரதிநிதிகள் இந்தியா வருகை appeared first on Dinakaran.

Tags : Lok Sabha Elections ,India ,New Delhi ,Vauninath ,BJP ,Lok Sabha ,Party ,Dinakaran ,
× RELATED மக்களவை தேர்தலில் சூதாட்டம் ஆன்லைன் நிறுவனத்தின் 4 கோடி சொத்து பறிமுதல்