×
Saravana Stores

நாளை மறுநாள் வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள்; அமேதி, ரேபரேலி ‘சஸ்பென்ஸ்’ நீடிப்பு: கடைசி நேர சமாதான முயற்சிகள் தீவிரம்

புதுடெல்லி: நாளை மறுநாள் அமேதி, ரேபரேலி தொகுதிகளுக்கான வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்ற நிலையில், ராகுலையும், பிரியங்காவையும் சமாதானப்படுத்தும் முயற்சிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ள காங்கிரஸ் கட்சி, மொத்தமுள்ள 80 தொகுதிகளில் 17 இடங்களில் மட்டும் போட்டியிடுகிறது. மீதமுள்ள தொகுதிகளில் சமாஜ்வாதி கட்சி மற்றும் பிற கூட்டணி கட்சிகள் போட்டியிடுகின்றன. காங்கிரசின் கோட்டையாக கருதப்படும் அமேதி மற்றும் ரேபரேலி ெதாகுதியில் வரும் 20ம் தேதி ஐந்தாம் கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்த தொகுதிகளில் வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் நாளை மறுநாள் (மே 3). ஆனால் இந்த இரு ெதாகுதிகளுக்கும் காங்கிரஸ் சார்பில் யார் யார் போட்டியிடுகின்றனர் என்பது சஸ்பென்சாக இருக்கிறது. இதற்கு காரணம் 2019 தேர்தலில் அமேதி தொகுதியில் போட்டியிட்ட ராகுல்காந்தி, பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானியிடம் தோற்றார். தற்போது வயநாடு தொகுதியில் ராகுல்காந்தி போட்டியிட்டுள்ளார். 2019ல் ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டு வென்ற சோனியா காந்தி, தற்போது ராஜ்ய சபா எம்பியாகிவிட்டார்.

அதனால் சோனியா காந்தியின் குடும்பத்தை சேர்ந்த யார் இந்த தொகுதிகளில் போட்டியிடுவார்கள்? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அமேதியில் மீண்டும் ராகுலும், ரேபரேலியில் பிரியங்காவும் போட்டியிட வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இருவரும் இந்த தொகுதிகளில் போட்டியிடுவது குறித்து எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை. இவர்களை சமாதானப்படுத்தி இரு தொகுதியிலும் போட்டியிட முயற்சிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

The post நாளை மறுநாள் வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள்; அமேதி, ரேபரேலி ‘சஸ்பென்ஸ்’ நீடிப்பு: கடைசி நேர சமாதான முயற்சிகள் தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Amethi ,New Delhi ,Raebareli ,Rahul ,Priyanka ,Congress Party ,Samajwadi Party ,Uttar Pradesh ,Dinakaran ,
× RELATED முறைகேடுகள் நடப்பதை தடுக்க நீட்...