காங்கயம், மே 1: காங்கயம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட நத்தக்காடையூர் ஊராட்சியில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் அனைத்து பகுதிக்கும் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது.
மேலும் ஆங்காங்கு ஆழ்குழாயில் இருந்து தண்ணீர் எடுத்து விநியோகம் செய்யப்படுகிறது. பல்வேறு இடங்களில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக, ஊராட்சி மூலம் பொது குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.
குடிநீர் வரும்போது பெரும்பாலான வீடுகள் மற்றும் சில வர்த்தக நிறுவனங்களில், மின் மோட்டாரை பொருத்தி குடிநீரை உறிஞ்சுகின்றனர். இதனால் பொது குழாய்களை நம்பி உள்ள சாமானிய மக்களுக்கு, குடிநீர் சரிவர கிடைப்பதில்லை. இந்நிலையில், பொது குழாய்களை மட்டுமே குடிநீருக்கு சார்ந்திருக்கும் மக்கள் நலன் கருதி, மின் மோட்டார் பொருத்தி உறிஞ்சுபவர்களை கண்டறிந்து, நடவடிக்கை எடுக்க நத்தக்காடையூர் ஊராட்சி நிர்வாகம் முன் வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post மின் மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சுவதால் குடிநீரின்றி மக்கள் தவிப்பு appeared first on Dinakaran.