×

இலவச இதய பரிசோதனை முகாம்

 

சிவகங்கை, மே 1: மே தினத்தை முன்னிட்டு, சிவகங்கை சிவில் இன்ஜீனியர் அசோசியேசன், சிவகங்கை சீமை கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரிய சங்கம் மற்றும் தனியார் மருத்துவமனை சார்பில் இலவச இதய பரிசோதனை முகாம் நடைபெற்றது. மருத்துவர் காயத்ரி தலைமையிலான மருத்துவக்குழுவினர் 120க்கும் மேற்பட்டோருக்கு இசிஜி, சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளை செய்தனர். நகர்மன்ற தலைவர் துரை ஆனந்த் துவங்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளர்களாக எம்எல்ஏ செந்தில்நாதன், முன்னாள் எம்எல்ஏ ராஜசேகரன், சங்கத்தலைவர் ரவி, துணைத்தலைவர் ராதாகிருஷ்ணன், செயலர் சரவணமுத்து மற்றும் சங்க நிர்வாகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post இலவச இதய பரிசோதனை முகாம் appeared first on Dinakaran.

Tags : Sivagangai ,Sivagangai Civil Engineer Association ,Sivagangai Seam Construction ,Unorganized Workers Welfare Board Association ,Checkup ,Dinakaran ,
× RELATED கொலை வழக்கில் கைதான நான்கு பேருக்கு குண்டாஸ்